×

வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்


சென்னை: வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணின் முழங்காலில் இருந்த கட்டியை மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை வாயிலாக காவேரி மருத்துவமனை அகற்றி உள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த 29 வயது பெண்ணின் வலது முழங்காலில் இரண்டு மாதங்களாக அசவுகரியம் இருந்துள்ளது. அது, படிப்படியாக மோசமடைந்து, உடலின் இயக்கத்தால் கடுமையானதாகி கொண்டிருந்தது. இதன் வலி அந்த பெண்ணின் அன்றாட வாழ்க்கையை பாதித்தது. வடபழனி காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் வலதுபுற டிஸ்டல் தொடை எலும்பில் நோயியல் சார்ந்த எலும்பு முறிவுடன் முற்றிய வடிவில் ஜெய்ன்ட் செல் கட்டி (GCT) இருப்பதை கண்டறியப்பட்டது. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரவிக்குமார் கிருபானந்தன் தலைமையில் மருத்துவ குழு நோயாளியை மூட்டுப் பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

கட்டியை அகற்றிய பிறகு அந்த பெண் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: உறுப்பை இழப்பது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பெரிதும் நிலைகுலையச் செய்யக் கூடியது. அவரது உறுப்பை பாதுகாப்பதன் மூலம், நாங்கள் அவரை மேற்கொண்டு துன்பங்களிலிருந்து காப்பாற்றியது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு அவரது வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,Chennai ,Bangladesh ,
× RELATED அந்தமான் பகுதியில் தென்மேற்கு...